“காலியிடங்களில் மைதானம் அமைக்க வேண்டுமென தங்கம் வென்ற கோமதி மாரிமுத்து கோரிக்கை “10 லட்சம் பரிசு வழங்கிய முக ஸ்டாலின் !!!…

ஆசிய தடகள போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெற்றி பெற்ற கோமதி மாரிமுத்துவுக்கு மு க ஸ்டாலின் 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கினார்

ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரமங்கை கோமதி மாரிமுத்துவிற்கு தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டுகளையும் பரிசுகளையும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் ஸ்டாலின் அவர்கள் திமுக சார்பிலும் காங்கிரஸ் சார்பிலும் ரூபாய் 10 லட்சம் கோமதி மாரிமுத்து அவர்களுக்கு வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் கோமதி மாரிமுத்து இன்று மு க ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்று 10 லட்சம் பரிசுத் தொகையை வாங்கி சென்றார் அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார் ,கிராமப் பகுதிகளில் அதிக காலியிடங்கள் உள்ளன அவ்விடங்களை சரிப்படுத்தி மைதானங்கள் ஆக மாற்ற வேண்டும் ஏனெனில் கிராமப்புறத்தில் உள்ள விளையாட்டு வீரர்கள் மைதானத்திற்காகவே வெகுதூரம் சென்று அதனாலேயே சோர்வடைய நேரிடுகின்றன மேலும் வீரர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் கிடைப்பதுமில்லை ஒலிம்பிக் போட்டிகளில் வெற்றி பெறுவது கடினம் கிராமப்புற வீரர்கள் வெற்றி பெற அனைவரும் உதவ முன்வர வேண்டும் என்றும்   கோரிக்கை விடுத்துள்ளார்