திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகின்றார் ஸ்டாலின்….!!

திருவாரூரில் முக.ஸ்டாலின் தனது தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்க இருக்கின்றார்.

மக்களவை தேர்தல் ஏப்ரல் 11_ஆம் தேதி  தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுமென இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது . தமிழகத்தில் இரண்டாம் கட்ட தேர்தலாக ஏப்ரல் 18_ஆம் தேதி நாடாளுமன்ற  மற்றம் 18 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுமென அறிவிக்கப்பட்டது.

Image result for மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி

 தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம்பெற்றுள்ளன . அதே போல அதிமுக தலைமையிலான கூட்டணியில் பிஜேபி , பாமக மற்றும் தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் இணைந்து தேர்தலை சந்திக்கின்றது . இந்நிலையில் இரு கூட்டணி கட்சிகளும் தங்களுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளரை அறிவித்துள்ளனர் . மேலும் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது .

Image result for ஸ்டாலின் பிரசாரம்

இந்நிலையில் முதல்கட்ட பிரசாரத்தை ஸ்டாலின் இன்று திருவாரூர் தொடங்குகின்றது .  ஸ்டாலினின் இந்த முதல் கட்ட பிரசாரம் ஏப்ரல் 06_ஆம் தேதி நிறைவடைகின்றது . ஒருநாள் கூட இடைவெளி இன்றி தொடர்ந்து  18 நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றார் ஸ்டாலின் . அந்த வகையில் 18 நாட்களில் ஸ்டாலின் நாகை , தஞ்சை , பெரம்பலூர் , சேலம் , தர்மபுரி , திருவண்ணாமலை , வடசென்னை , திருவள்ளூர் , திண்டுக்கல் , தேனி , பெரியகுளம் , மதுரை , விருதுநகர் , சிவகங்கை , ராமநாதபுரம் , கிருஷ்ணகிரி , வேலூர் , அரக்கோணம் , தென்சென்னை , நீலகிரி , திருப்பூர் , கோவை , பொள்ளாச்சி , ஈரோடு , கரூர் , கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்கு சேகரிக்கிறார் .

Image result for ஸ்டாலின் பிரசாரம்

பின்னர் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை ஏப்ரல் 7 ஆம் தேதி தொடங்கும் ஸ்டாலின் அந்த மாதம் 16ம் தேதி நிறைவு பிரசாரத்தை நிறைவு செய்கிறார் . இந்த பத்து நாட்களில் அவர் 11 மக்களவைத் தொகுதிகளில் மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார் . இந்த பிரசார பயணங்களில் அவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் செல்ல உள்ளார் மற்றும் இடைத் தேர்தலை எதிர்கொள்ளும் 18 சட்டமன்ற தொகுதிகளிலும் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கின்றார்.