ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு செய்தது என்ன ?.. ஸ்டாலின் கேள்வி ….

தேர்தலுக்கான பிரச்சார பயணத்தில் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு என்ன செய்தார்கள் என்று சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார் .

இந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் ஏப்ரல் 18ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் தேர்தலுக்கான பணிகள் கொண்டாட்டங்கள் வெகுவிமர்சியாக நடைபெற்று வருகிறது இதனையடுத்து இன்று வேட்பாளர் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்று  தேர்தல் ஆணையம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதனை தொடர்ந்து பல்வேறு கட்சியினர் வேகமாக வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர் மேலும் தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கட்சியினர் சூறாவளிப் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர் இதனையடுத்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தனது பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது

இதனையடுத்து திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் மு ஸ்டாலின் அவர்கள் கடந்த 20ஆம் தேதி திருவாரூரில் தனது முதல் பிரச்சார பயணத்தை தொடங்கினார் இதனையடுத்து தற்போது திருவள்ளூர் மாவட்டம்  காக்களூர் தொகுதியில் பிரச்சார பயணத்தில் ஈடுபட்டு வருகிறார் அந்த பொதுக்கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசினார் அவர் கூறியதாவது,

இதுவரை தமிழகத்தில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் ஈடுபட்ட போதெல்லாம் பல்வேறு நலத்திட்டங்களை தமிழக மக்களுக்கு செய்து இருக்கிறோம் ஆனால் தற்பொழுது பாரதிய ஜனதாக் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் கூட்டணியில் ஈடுபட்டு உள்ளன அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தமிழகத்தில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கட்சி மத்தியில் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது இரண்டு கட்சிகளும் தமிழகத்திற்கு இந்த ஐந்து ஆண்டுகள் செய்தது என்ன என்று முக ஸ்டாலின் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்மேலும் தமிழகத்திற்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் நீங்கள் செய்த ஏதேனும் ஒரு திட்டத்தை உங்களால் பட்டியலிட்டு கூற முடியுமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்