”ஸ்டாலின் அரைவேக்காடு”அமைச்சர் உதயகுமார் கடும் விமர்சனம் …!!

முதல்வரை அபண்டமாக குற்றம் சாட்டுவது ஸ்டாலினின் அரைவேக்காட்டு தனத்தை காட்டுகின்றது என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார்.

நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு  எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று  எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். ஏன் இவ்வளவு நாட்களாக வரவில்லை என்று அங்கே அவரை மக்கள் கேள்வி கேட்டனர்.

Image result for r.b udhayakumar

நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள கனமழை, நிலச்சரிவு இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்காமல் முதல்வர் ஏன் வெளிநாடு பயணத்தை மேற்கொள்ள இருக்கின்றார் என்று ஒரு அபாண்டமான பழியை சுமத்தி இருக்கிறார். வெளிநாடுகளுக்கு செல்வது என்பது அவர்களைப் போல ஒரு சுற்றுலா செல்வதற்காக, ஏதேனும் தேவைக்காகவோ இல்லை. இது முழுக்க முழுக்க அரசுப் பயணமாக மருத்துவத்துறை , மக்கள் நல்வாழ்வுத்துறை , பால்வளத்துறை , தகவல் தொழில்நுட்பத் துறை தொழில் துறை என்று துறைகள் சார்ந்த முதலீடுகளை ஈர்ப்பதற்காக உலக முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக செல்கின்றார்.

Image result for உதயகுமார்

உலக முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டு மக்களின் வளர்ச்சிக்காக, தொழில் வளர்ச்சிக்காக இளைஞர்களின் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதற்காக முதல்வரின் பயணத்தை கொச்சைப்படுத்தும் விதமாக ஸ்டாலின் பேசி இருப்பது என்பது அவரின் அரசியலின் அரைவேக்காட்டுத் தனத்தை காட்டுகிறது.எதிர் கட்சித் தலைவர் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை என்ற சந்தேகத்தை எழுப்புகிறது.உலக முதலீட்டாளர் மாநாட்டை தொடர்ந்து  முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்கு நேரில் செல்வது என்பது ஒட்டுமொத்த உலகத் தமிழகத்தின் வரவேற்பு மிக்க நடவடிக்கை  என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *