தமிழ் தொன்மையை அழிக்க சதி…. ஸ்டாலின் குற்றசாட்டு..!!

தமிழின் தொன்மையை அளிக்க சதி திட்டம் தீட்டப்படுவதாக திமுக தலைவர்   ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழுக்கு சிறந்த தொண்டுகளாற்றிய அறிஞர்கள் குறித்து கவி பேரரசு வைரமுத்து எழுதிய தொகுப்பான தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழாவானது சென்னை காமராஜர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் திமுக தலைவர்  ஸ்டாலின் நூலை வெளியிட முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அதனை பெற்றுக் கொண்டார்.

Image result for stalin dmk

இதையடுத்து விழாவில் பேசிய ஸ்டாலின், தமிழ் மொழியின் தொன்மையையும், திராவிட இனத்தின் பெருமைகளை சிதைக்கவும், தமிழ் மக்களின்  உரிமைகளை  பறிக்கவும்  சதி திட்டம் தீட்டப்படுவதாக குற்றம் சாட்டினார். இவரை தொடர்ந்து பேசிய  கவிஞர் வைரமுத்து, கலைஞரின் நினைவிடத்தில் புத்தகத்தை வைத்து வணங்கி வந்ததை கணீர் மல்க  தெரிவித்தார். மேலும்  குழந்தைகளிடம் தமிழில் பேசுங்கள், குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.