விற்பனையாகாமல் தேங்கி நிற்கும் கார்கள் … ஊழியர்கள் கடும் வேதனை ..!!

டொயோட்டோ மற்றும் ஹூண்டாய் கார் தயாரிப்பு நிறுவனங்கள் தனது தொழிற்சாலைகளில் கார்  உற்பத்தியை நிறுத்தி உள்ளது. 

பொருளாதார மந்தநிலை காரணமாக ஜப்பானின் கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டோ மற்றும் தென்கொரியாவின் ஹூண்டாய் நிறுவனங்கள் சில தொழிற்சாலைகளில் தங்கள் கார்களின் உற்பத்தியை தற்காலிமாக நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அங்கு பணியாற்றுபவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர்.

Image result for toyota car factories

இந்தியாவில் கடந்த சில மாதங்களாக ஆட்டோ மொபைல் துறை சரிவை சந்தித்து வருகின்றது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட கார்கள் விற்பனைக்கு செல்லாமல் இருப்பதால், அவை தொழிற்சாலைகளில் தேங்கி நிற்கின்றன. இதனால் புதிய கார்கள் தயாரிப்பதை நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தத் தொடங்கியுள்ளன.

Image result for toyota car factories

மேலும் , இந்திய ஆட்டோ மொபைல் துறையை பொருத்தவரை தற்போது வரை 3.5 லட்சம் பேரை வேலையை விட்டு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுமட்டுமின்றி , கடந்த 20 ஆண்டுகளில் வாகனங்களின் விற்பனையானது  சரிவை சந்தித்துள்ளது. மேலும் டொயாட்டோ நிறுவனம் தனது 7 ஆயிரம் கார்கள் விற்பனையாகாமல் தேங்கி நிற்பதால் இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது.