தொகுப்பாளினியாக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்…. எந்த நிகழ்ச்சி தெரியுமா….!!!

நடிகை ஸ்ருதிஹாசன் தொகுப்பாளினியாக களமிறங்கி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாகவும், நட்சத்திர நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளுமாணவர் நடிகை ஸ்ருதிஹாசன். இவர் நடிகர் கமலஹாசனை போலவே பன்முகத்திறமை கொண்டவர். அந்தவகையில் நடிப்பு, இசை உள்ளிட்ட பன்முகத் திறமை கொண்ட இவர் தொகுப்பாளியாகவும் அசத்தி உள்ளார் என்பது நம்மில் பலரும் அறியாத ஒன்று.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு சினிமா பிரபலங்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியை நடிகை ஸ்ருதிஹாசன் தொகுத்து வழங்கியுள்ளார். இந்நிலையில் அவர் மீண்டும் தொகுப்பாளினியாக களம் இறங்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி ஓடிடி தளத்திற்காக உருவாக்கும் ஒரு தெலுங்கு நிகழ்ச்சியை ஸ்ருதிஹசன் தொகுத்து வழங்க இருப்பதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *