காதலனுக்காக பிரியாணி ….. சமைத்து பரிமாறிய ஸ்ரீதேவி மகள் ஜான்வி…!

காதலன் குடும்பத்தினருக்கு பிரியாணி சமைத்து விருந்து படைத்துள்ள ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர், அவர்களோடு இணைந்து மதிய உணவை ருசித்துள்ளார்.

காதலன் இஷான் கட்டார், அவரது சகோதரனும் நடிகருமான ஷாகித் கபூர், ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோருடன் இணைந்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை மதிய உணவை ருசித்துள்ளார் நடிகை ஜான்வி கபூர்.மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர், பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் சகோதரன் இஷான் கட்டார் ஆகியோர் கடந்தாண்டு வெளியான ‘தடக்’ என்ற இந்திப் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானர்கள். மராத்தி மொழியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘தடக்’ ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.இந்தப் படத்துக்குப் பின்னரும் தொடர்ந்து நட்பாக பழகிவரும் ஜான்வி – இஷான் ஜோடி அடிக்கடி பொது இடங்களில் உலாவருகின்றனர்.

 

இதையடுத்து இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகக் கிசுகிசுக்கப்பட்டது. இதனை இருவரும் மறுத்ததுடன், நெருக்கமான நண்பர்களாகவே இருக்கிறோம் என்றும் கூறினர்.காதலன் இஷான் கட்டார், அவரது சகோதரர் ஷாகித் கபூர், ஷாகித் மனைவி மிரா ராஜ்புட் ஆகியோருடன் இணைந்து விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையன்று மதிய உணவு ருசித்துள்ளார் ஜான்வி. இதையடுத்து சிவப்பு அரிசியில் பிரியாணி சமைத்த ஜான்வி, அதனை அவர்களுக்கு பரிமாறியுள்ளார்.

ஜான்வி சமைத்த பிரியாணியை தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படமாக வெளியிட்டுள்ள மிரா ராஜ்புட், சிவப்பு அரிசியில் பிரியாணி சமைத்துள்ள ஜான்விக்கு பாராட்டுகளைத் தெரிவிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.முன்னதாக, ஜான்வியுடன் ஏற்பட்ட பழக்கம் குறித்து இஷானிடம் கேட்டபோது, ”நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் ஒன்றாக பல இடங்களுக்கு செல்கிறோம். அவர் அதிகமாக தென்னிந்திய பாடல்களை கேட்பதால், எனக்கு தற்போது அந்தப் பாடல்கள் பிடிக்கின்றன” என்றார். ஜான்வி கபூர் தற்போது இரண்டு இந்திப் படங்களில் நடித்துவருகிறார். இதேபோல் இஷானும் புதிய இந்திப் படம் ஒன்றில் கமிட்டாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *