2019 உலக கோப்பை : இலங்கை அணி அறிவிப்பு…!!

இலங்கை கிரிக்கெட் அணி  உலகக்கோப்பைகான 15 வீரர்களை நேற்று அறிவித்தது 

2019 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகின்ற மே மாதம் 30-ம் தேதி முதல் தொடங்கி ஜூலை 14-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில்  நடக்கிறது. இந்த போட்டியில்  நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா இந்தியா, தென்ஆப்பிரிக்கா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கு ஐ.சி.சி ஏப்ரல் 23 ம் தேதி வரை காலக்கெடு கொடுத்திருந்தது. ஏற்கனவே நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இங்கிலாந்து  அணிகள் அறிவித்த நிலையில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான்  அணியும் நேற்று அறிவித்தது.

இந்நிலையில் இலங்கை அணியும் நேற்று உலக கோப்பையில் களமிறங்கும் 15 வீரர்களை தேர்வு செய்து அதிகாரபூர்வமாக அறிவித்தது.

திமுத் கருணாரத்னே (கேப்டன்), அவிஷ்கா பெர்னாண்டோ, லஹிரு திரிமன்னே, குசல் பெரேரா (விக்கெட் கீப்பர்), குசல் மென்டிஸ், ஏஞ்சலோ மேத்யூஸ், தனஞ்ஜெயா டி சில்வா, ஜெப்ரி வாண்டர்சே, திசேரா பெரேரா, இசுரு உதனா, லசித் மலிங்கா, சுரங்கா லக்மல், நுவான் பிரதீப், ஜீவன் மென்டிஸ், மிலின்டா ஸ்ரீவர்தனா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். நேற்று ஒரே நாளில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், இலங்கை அணிகள் உலக கோப்பைக்கான வீரர்களை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.