இலங்கை குண்டுவெடிப்பு “IS அமைப்புடன் தொடர்பு” கோவையை சேர்ந்தவர் கைது…!!

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு IS அமைப்புடன் தொடர்பில் இருந்த கோவையை சார்ந்தவர் உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் 21_ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது அடுத்தடுத்து 3 ஓட்டல்கள் , 3 தேவாலயங்கல் என தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இந்த கொடூர சம்பவத்தில் 258 பேர் பலியாகி , 500_க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். உலகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை நிகழ்த்தியது நாங்கள் தான் என ISIS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.இலங்கை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடையவர்களுடன் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் தகவல்களை பரிமாறியதாக NIA தரப்பில் சொல்லப்படுகின்றது.

என்.ஐ.ஏ க்கான பட முடிவு

இந்நிலையில் நேற்று NIA அதிகாரிகள் கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர்  உக்கடம் பகுதியில் அசாருதீன், குனியமுத்தூரில் அபுபக்கர் சித்திக் , போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோர் வீடுகளில் தீடிர் சோதனை மேற்கொண்டனர்.இந்தச் சோதனையில் அவர்களிடமிருந்து  செல்போன்கள், பென் டிரைவ்கள் உள்ளிட்டவற்றை NIA அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் சிலரிடம் இலங்கை தாக்குதல் சம்பவம் குறித்து சிலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கோவையைச் சேர்ந்த அசாருதீன் என்பவர் இலங்கை குண்டுவெடிப்பில் மூளையாக செயல்பட்டவருடன் தொடர்பு வைத்திருந்தார் என்றும் , IS இயக்கத்துடன் தொடர்பு வைத்துள்ளார் என்று NIA குற்றம் சாட்டிய நிலையில் முகமது அசாருதீன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைதுசெய்துள்ளனர். கைது செய்யப்பட்ட இவர்களை NIA சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *