இலங்கை குண்டு வெடிப்பு…. 3 இந்தியர்கள் உயிரிழப்பு….!!

இலங்கையில் அடுத்தடுத்து 8 இடங்களில் நடைபெற்ற  குண்டுவெடிப்பு சம்பவத்தில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேவாலயங்களில் ஈஸ்டர் பண்டிகை கொண்டாடப்_ பட்டத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் அடுத்தடுத்து என 8 இடங்களில் குண்டு வெடித்தது. தேவாலயம் , நட்சத்திரவிடுதி மற்றும் குடியிருப்புப்பகுதி என நடத்த இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 185_க்கும் அதிகமானோர் பேர் பலியாகியதாகவும் , 500_க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த கொடூர சம்பவம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் வெளியிட்டுள்ள டுவிட் செய்தியில், இலங்கையில் நடைபெற்ற குண்டு வெடிப்புகளில் 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்றும் , மேற்கொண்ட தகவல்களை நாங்கள் உன்னிப்பாக கணித்து வருகிறோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இலங்கைக்கு தேவையான மனிதநேய உதவிகளை இந்தியா செய்ய தயாராக இருக்கின்றது. தேவைப்பட்டால் இந்திய மருத்துவ குழுவை கொழும்புவிற்கு அனுப்புகின்றோம் என இலங்கை வெளியுறவுத்துறை மந்திரியிடம் சுஷ்மா சுவராஜ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.