ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்தது..!!

ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் திடீரென வெடித்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது 

ஸ்பைஸ் ஜெட் விமான நிறுவனம் இந்தியாவின் பல பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது. இந்நிறுவனம் இந்தியா மட்டுமில்லாமல் துபாய், இலங்கை, தாய்லாந்து உட்பட வெளி நாடுகளுக்கும் விமானத்தை இயக்கி வருகிறது. இந்நிலையில் இன்று எஸ் ஜி 58 என்ற விமானம் துபாயில் இருந்து ஜெய்ப்பூருக்கு வந்து கொண்டிருந்தது. இதில் 189 பயணிகள் பயணித்தனர். விமானம் ஜெய்ப்பூர் விமான நிலையம் அருகே வந்த போது விமானி டயரை கீழே இறக்கினார்.

Image result for துபாயில் இருந்து வந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தின் டயர் வெடித்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது

அப்போது அப்போது விமானத்தின் டயர் திடீரென வெடித்தது. இதனால் பயணிகள் சற்று அச்சமடைந்தனர். இதையடுத்து விமானி ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். இதனால் விமானம் இறங்க நிலையத்தில் அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால் விமானம் எந்த வித அசம்பாவிதமுமின்றி பத்திரமாக தரையிறக்கப்பட்டது. இதில்எந்த பயணிக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *