தோசைக்கேற்ற சுவையான வெங்காயம் தக்காளி மசாலா..!!

தோசைக்கேற்ற சுவையான வெங்காயம் தக்காளி மசாலா எளிமையாக செய்யலாம். 

தேவையான பொருட்கள் :

வெங்காயம்-3

தக்காளி-2

மிளகாய்த்தூள்-தேவையான அளவு

பெருஞ்சீரகம்-1 ஸ்பூன்

பட்டை- தேவையான அளவு

கறிவேப்பிலை- தேவையான அளவு

உப்பு- தேவையான அளவு

கொத்தமல்லி இலை- தேவையான அளவு

லவங்கம்- தேவையான அளவு

பிரிஞ்சி இலை-தேவையான அளவு

tomato க்கான பட முடிவு

செய்முறை :

முதலில் கடாயில்  எண்ணெய் ஊற்றி அதில் பெருஞ்சீரகம், பட்டை, லவங்கம், பிரிஞ்சி இலை போட்டு தாளித்து  அதில்  வெங்காயம், தக்காளி போட்டு நன்றாக வதக்க வேண்டும். பின்  மிளகாய்த்தூள், உப்பு போட்டு கிளற வேண்டும்.  நன்கு சுண்டி வந்ததும்  எண்ணெய் தெளிய ஆரம்பிக்கும் . இதில் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போட்டு இறக்கினால் சுவையான  வெங்காயம் தக்காளி மசாலா தயார் !!