கோடைக்கு உகந்த மசாலா மோர் – எளிமையாக செய்யலாம்!

தற்போது கோடை வெயில் ஆரம்பித்துள்ளதால் அனைவரும் சாப்பாட்டை விட தாகம் தீர்க்கும் பானத்தையை நாடி செல்வர். இதற்கு சிறந்த தேர்வாக மோர் இருக்கும். தாகம் தீர்க்கும் பானம் மட்டுமல்ல ஆரோக்கியமானதும் என்பதால் அனைவரும் மோர் குடிக்கலாம். அனைத்து காலங்களிலும் மோர் குடிக்க வேண்டிய நிலையில் உள்ளது. இன்று மசாலா மோர் செய்முறையை பார்க்கலாம்.

தேவையானவை:

தயிர் – 500 மி,
கொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவு,
இஞ்சி – ஒரு சிறிய துண்டு,
பச்சை மிளகாய் – 2,
தண்ணீர் – தேவையான அளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவு,
சீரகம் – 1 ஸ்பூன்.

செய்முறை:

கொத்தமல்லி இலை, தோல் நீக்கிய இஞ்சி துண்டுகள், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, உப்பு, சீரகம் சேர்த்து அரைத்து எடுக்கவும். தயிரில் தண்ணீர் விட்டு கடைந்து மோராக்கவும். இந்த மோரில் அரைத்த விழுதை சேர்த்துக் கலந்து 10 நிமிடம் மூடி வைக்கவும். பிறகு வடிகட்டி எடுத்து பரிமாறவும்.

குறிப்பு : மசாலா மோரை தாளித்தும் குடிக்கலாம். விரும்பம் உள்ளவர்கள் ஒரு வாணலில் எண்ணெய், கடுகு போட்டு வெடித்ததும் இந்த மசாலா மோரை கலந்து இறக்கியும் குடிக்கலாம்.