போச்சு…. போச்சு…. ”22,00,000 கிலோ நாசம்” …. மசாலா கம்பெனியே போச்சு …!!

தேனி கோடாங்கிபட்டி தனியார் மசாலா நிறுவனத்தில் இரண்டவது நாளாக எறிந்து வரும் தீயை கட்டுப்படுத்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியல்  இருக்கக்கூடிய ஈஸ்டர்ன்  மசாலா நிறுவனத்தில் இருந்து பல பகுதிகளுக்கு மசாலா கொடுக்கப்படுகின்றது. இந்த நிறுவனத்தில் 400_க்கும் அதிகமான பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நேற்று  காலை வழக்கம் போல பணி தொடங்கிய போது 8 மணியளவில் தீடிரென தீ பற்றி எறிய ஆரம்பித்தது. இதையடுத்து அங்கிருந்த எச்சரிக்கை அலாரம் அடித்ததை தொடர்ந்து அனைத்து பணியாளர்களும் வெளியே ஓடினர்.இதை தொடர்ந்து அங்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால் தீயை கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் தீயணைப்பு வீரர்கள் திணறினர். தொடர்ந்து  தேனி , மதுரை , திண்டுக்கல் , விருதுநகர் ஆகிய மாவட்டத்தில் இருந்து 16 தீயணைப்பு வாகனகள் வரவழைக்கப்பட்டடு தொடர்ந்து இரண்டாவது நாளாக தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில்  2,200 டன் மஞ்சள் , மல்லி ,சீரகம் உள்ளிட்ட ஆறு வகையான மூலப் பொருட்கள் எரிந்து நாசமாகிகிளன என்றும் தீ மற்ற பகுதிகளுக்குப் பரவாமல் இன்று பிற்பகலுக்குள் கட்டுப்படுத்தப்படும் என்று தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *