சிறப்பு இரயில் இயக்க வேண்டி பா.ஜ.க மாநில தலைவர் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வைத்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை கடைசி செவ்வாய் அன்று சிறப்பாக திருவிழா நடைபெறும். இவ்விழாவில் பங்கேற்க சிவகங்கை, காரைக்குடி பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். இந்த ஆண்டும் 24-ஆம் தேதி பக்தர்கள் பாதயாத்திரை தொடங்கி வைத்தீஸ்வரன் கோவில் வந்தடைகின்றனர்.
அவர்கள் 25-ஆம் தேதி நடைபெறும் பூஜைகளில் கலந்துகொண்டு 26-ம் தேதி சொந்த ஊருக்கு செல்கின்றர். மேலும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் விழாவில் பங்கேற்கின்றனர். ஆகவே திருச்சி-புதுக்கோட்டை வழியாக காரைக்குடி சென்றடையும் வகையில் 26-ம் தேதி காலை 11 மணிக்கு வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து சிறப்பு ரயில் ஒன்றை இயக்க ஏற்பாடு செய்து தர வேண்டி பா.ஜ.க மாவட்ட தலைவர் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.