கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கு நாளை சிறப்பு ரயில்… தெற்கு வெளியிட்ட ரயில்வே தகவல்…!!!!

கொச்சுவேலியில் இருந்து தாம்பரத்திற்கு மார்ச் 19-ஆம் தேதி ஒரு வழி சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கேரளத்தின் கொச்சுவேலியில் இருந்து மாலை 5.15 மணிக்கு புறப்படும் ஒரு வழி சிறப்பு ரயில் மறுநாள் காலை 8 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

இதனையடுத்து திருவனந்தபுரம், நாகர்கோவில் நகர், திருநெல்வேலி, வள்ளியூர், சாத்தூர், விருதுநகர், கோவில்பட்டி, திருச்சி, திண்டுக்கல், விருத்தாச்சலம், விழுப்புரம், மதுரை, செங்கல் பட்டு, கோட்டை வழியாக இந்த ரயில் இயக்கப்படுகிறது. மேலும் சனிக்கிழமை காலை 8 மணி முதல் இதற்கான முன்பதிவு நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply