“எல்லாம் காணாம போயிடுச்சு” வசமாக சிக்கிய 6 பேர்…. கைது செய்த போலீஸ்….!!!

வாகன உதிரி பாகங்களை திருடிய 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து வாகன உதிரி பாகங்கள் திருட்டு போனதாக நிர்வாகத்தின் சார்பில் அந்தப் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த சிப்காட் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தொழிற்சாலை ஊழியர்களான வினோத், ரகுபதி, பார்த்திபன், சுகுமார் ஆகிய 4 பேர் திருடி பொருட்களை விற்பனை செய்து விட்டனர் என்பது தெரியவந்தது. மேலும் பொருட்களை வாங்கியவர்கள் மனோகர், ராமு ஆகிய 2 பேர் என்பது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 6 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து வாகன உதிரி பாகங்களை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *