கொலஸ்டிராலை குறைத்து  ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவும் சோயா பீன்ஸ் கிரேவி !!!

சோயாபீன்ஸ்  கொலஸ்டிரால் அளவைக் குறைத்து  ஆரோக்கியமான இதயத்தை பராமரிக்க உதவுகிறது. இத்தகைய சிறப்புடைய சோயாபீன்ஸ் கொண்டு  சுவையான சோயா பீன்ஸ் கிரேவி செய்யலாம் வாங்க .

தேவையான பொருட்கள்:

சோயா பீன்ஸ் – 1 கப்

தக்காளி – 1

வெங்காயம் – 1

தேங்காய் – 1/4 கப்

கடுகு – 1/2  டீஸ்பூன்

கரம் மசாலா – 1/2  டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையானஅளவு

கொத்தமல்லி – 1  டேபிள் ஸ்பூன்

தண்ணீர் – தேவையானஅளவு 

Soybeans gravy க்கான பட முடிவு

செய்முறை:

முதலில்  ஊற வைத்த சோயாவை , கழுவி வேக வைத்து கொள்ள வேண்டும். ஒரு  கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை , சோம்பு  மற்றும்  வெங்காயத்தை சேர்த்து, வதக்கி கொள்ள  வேண்டும்.பின் அதனுடன்  தக்காளி, மஞ்சள் தூள், கரம் மசாலா சேர்த்து  2 நிமிடம் வதக்கி , பின்பு சோயாவை சேர்த்து கொள்ள வேண்டும் .  துருவிய தேங்காய், உப்பு மற்றும்   தண்ணீர் சேர்த்து  கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான சோயா பீன்ஸ் கிரேவி தயார்!!!