ஆர்ச்சர் அபார பந்து வீச்சு…. தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவரில் 173/6…!!

தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 173 ரன்களுடன் விளையாடி வருகிறது 

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா –  இங்கிலாந்து அணிகள் மோதியது. இப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியது. இதில் தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டுப்லெஸிஸ் டாஸ் வென்று பந்து வீச  முடிவு செய்தார் . இதையடுத்து இங்கிலாந்து அணியில் ஜானி பேர்ஸ்டோவும், ஜேசன் ராயும் ஆட்டத்தை துவங்கினர். போட்டியின் முதல் ஓவரில் இம்ரான் தாஹிர் வீசிய  2 வது பந்தில் பேர்ஸ்டோ 0 ரன்னில் ஏமாற்றமளித்தாலும், அதன் பிறகு வந்த ஜோ ரூட்  59 பந்துகளில்  51  ரன்களும், ஜேசன் ராய் 53 பந்துகளில் 54  ரன்களும் எடுத்தனர்.

Image

இவர்களை போலவே  மோர்கன்  60 பந்துகளில் 57 ரன்களும்,  பென் ஸ்டோக்ஸ் 79 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்க அணியில் அதிகபட்சமாக நெகிடி 3 விக்கெட்டுகளும், இம்ரான் தாஹிர், ரபாடா ஆகியோர் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

Image

பின்னர் 312 ரன்கள் இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணியில் துவக்க வீரர்களாக ஹசிம் அம்லாவும், குயிண்டன் டிகாக்கும் களமிறங்கினர். களமிறங்கிய சிறிது நேரத்தில் அம்லா ஜோப்ரா ஆர்ச்சர் வீசிய பவுன்சரில் காயமடைந்து பெவிலியன் திரும்பினார். இதையடுத்து அவருக்கு பதில் ஏய்டன்  மார்க்ராம் களமிறங்கினார். ஜோப்ரா ஆர்ச்சர் பந்து வீச்சில்  மார்க்ராம் 11  ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து வந்த கேப்டன் டுப்லெஸிஸும் 5 ரன்னில்  ஆர்ச்சர் வீசிய அடுத்த ஓவரில் வெளியேறினார்.

Image

இதையடுத்து டிகாக்கும், வான் டெர் டசனும் சேர்ந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய டிகாக் அரைசதம் கடந்து விளையாடிய நிலையில் ப்லெங்கெட் ஓவரில்  68 (74) ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டுமினி 11 ரன்னில் ஆட்டமிழக்க,அதை தொடர்ந்து  பிரிட்டோரியஸ் 1  ரன்களில்  ரன் அவுட் ஆனார். இருப்பினும்  பொறுப்புடன் விளையாடி வான் டெர் டசன் அரைசதம் அடித்தார்.வான் டெர் டசன் 50 (56) ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் வேகத்தில் வெளியேறினார். இதையடுத்து காயமடைந்த அம்லா களமிறங்கினார். அம்லா 5 ரன்களுடனும் பெலுக்வயோ 19 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர். தற்போது தென் ஆப்பிரிக்க அணி 33 ஓவரில் 6 விக்கெட் இழந்து 173  ரன்கள் குவித்துள்ளது.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *