“கோலியும், தோனியும் மிரட்டுவார்கள்” – ஜே.பி டுமினி..!!

விராத் கோலியும், எம்.எஸ் தோனியும் மிரட்டலாக  ஆடுவார்கள்  என்று தென் ஆப்பிரிக்க வீரர் ஜே.பி டுமினி தெரிவித்துள்ளார். 

12-வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் இங்கிலாந்து அணியிடம் தோற்றது. இரண்டாவது போட்டியில் நேற்று வங்கதேச அணியிடம்  தோல்வியை சந்தித்துள்ளது. தென் ஆப்பிரிக்க அணி 3-ஆவது போட்டியில் நாளை மறுநாள் (5-ம் தேதி) நடக்கும் ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொள்கிறது.

Related image

இந்நிலையில் இந்திய அணியை எதிர் கொள்வது பற்றி ஜே.பி டுமினியிடம் கேள்வி கேட்ட போது அதற்கு அவர் பதிலளித்துள்ளார். அவர் கூறியதாவது, இந்திய அணியிடம் அதிக மேட்ச் வின்னர்கள் இருக்கிறார்கள். அந்த  அணியில் சுழற்பந்து மற்றும் வேகப்பந்து வீச்சு சிறப்பாக இருக்கிறது. ஐபிஎல்லில் பும்ரா அற்புதமாக பந்து வீசினார். அதை இங்கும் எதிர்பார்க்கலாம். உலகின் சிறந்த பேட்ஸ்மேனான விராத் கோலியும், அனுபவமிக்க வீரர் எம்.எஸ் தோனியும் அச்சுறுத்தலாக இருப்பார்கள் . இதையும் தாண்டி அந்த நாளில் எப்படி ஆடுகிறோம் என்பதை பொறுத்து வெற்றி வாய்ப்பு அமையும்” என்று அவர் கூறியுள்ளார்.