பெங்களூரு அணியில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர்…!!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

2019 ஐபிஎல் போட்டி கடந்த மார்ச் 23ம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்னை அணி இந்த முறையும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும் ஒவ்வொரு அணியும் வெற்றிக்காக போராடி வருகிறது. இதில் பெங்களூரு அணி எவ்வளவு தான் முயற்சி செய்தாலும் அந்த அணியால் ஒரு வெற்றியை கூட பெற முடியவில்லை. பெங்களூரு அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி ஆறிலும் தோற்றுள்ளது. இதனால் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்துள்ளது.

Image result for Dale Steyn

ஏற்கனவே பெங்களூரு அணி ஆஸி வேகப்பந்து வீச்சாளர் கவுல்டர்-நைல்-ஐ ஐபிஎல்லில் ஏலத்தில் எடுத்திருந்தது. அவர் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியதால் அவரால் பெங்களூரு அணியில் பங்கேற்கவில்லை. பின்னர் அணியில் சேரும் நேரத்தில் காயம் ஏற்பட்டதால் அவரால் பெங்களூரு அணியில் விளையாட முடியவில்லை.

Image result for Dale Steyn

இந்நிலையில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனால் பெங்களூரு அணி இன்று  நடைபெற இருக்கும்  பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் புத்துணர்ச்சியுடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  இவர் ஏற்கனவே பெங்களூரு அணிக்கு விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.