கொரோனாவால் ஒருநாள் தொடர் ரத்து… இன்று சொந்த நாட்டிற்கு திரும்பும் தென் ஆப்பிரிக்க அணி!

ஒருநாள் போட்டியில் பங்கேற்க இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி தொடர் ரத்து செய்யப்பட்டதால் இன்று சொந்த நாட்டிற்கு திரும்புகிறது. 

தென் ஆப்பிரிக்க அணி  3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க இந்தியாவுக்கு வந்தது. இரு அணிகளும் இமாச்சலப்பிரதேசம் தர்மசாலாவில் மோத இருந்த முதல் ஒருநாள் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதையடுத்து மார்ச் 15 ஆம் தேதி லக்னோவிலும், 18 ஆம் தேதி கொல்கத்தாவிலும் கொரோனா அச்சம் காரணமாக பார்வையாளர்கள் இன்றி நடைபெறுவதாக இருந்தது.

Image result for South Africa cricket team return to home country today

இதையடுத்து கொரோனாவின் தாக்கம் அதிகமானதால் தொடரை இரத்து செய்வதாக இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. தென் ஆப்பிரிக்க வீரர்கள் அனைவரும் கொரோனா அச்சம் காரணமாக லக்னோவில் உள்ள ஒரு ஹோட்டலில் முடங்கி கிடந்தனர். அவர்கள் வெளியில் எங்கும் செல்லவில்லை. இந்தநிலையில் லக்னோவில் இருந்து கொல்கத்தா சென்று அங்கிருந்து துபாய் வழியாக தங்கள் நாட்டுற்கு (தென் ஆப்பிரிக்கா) செல்கின்றனர்.