ஆதாரில் பெயர், முகவரியை மாற்ற வேண்டுமா..? இனி உங்க மொபைல் போன் மூலம் ஈஸியா மாற்றலாம்….!!!

ஆதார் அட்டை பயனர்களுக்கு வீட்டில் இருந்தபடியே சில மாற்றங்களை செய்ய UIDAI மீண்டும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்திய மாநில அரசுகளின் பல திட்டங்கள் மற்றும் சேவைகளை பெற இந்திய குடிமக்களின் முக்கிய அடையாளமாக ஆதார் அட்டை மாறிவிட்டது. குடிமக்களுக்கு ஆதார் அட்டைகளை வழங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ), கொரோனா வைரஸ் தொற்றுநோயின் பரவலுக்கு பின் சில புதிய மாற்றங்களை வெளியிட்டுள்ளது.  அதாவது இனி நீங்கள் வீட்டிலிருந்தே பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் பாலினத்தை எளிதாக மாற்றலாம். Uidai.gov.in/images/AadhaarHandbook2020.pdf என்ற இணையத்தளத்தில் ஆதார் கையேட்டின் PDF கோப்பு உள்ளது.

இந்த கையேட்டில் ஆதாரில் பெயரை மாற்றுவதில் எந்த வகையான திருத்தங்களைச் செய்யலாம் என்ற முழுமையான விவரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆதாரில் ஆவணம் இல்லாமல் இமெயில் ID-ஐ மாற்றலாம் அல்லது சேர்க்கலாம். இதற்கு ஆதார் சேவா கேந்திரா 50 ரூபாய் வசூல் செய்யும். அதனால் மக்கள் அனைவரும் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *