தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று மெரினா கடலில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைப்பது தொடர்பான கருத்து கேட்டு கூட்டம் நடத்தியது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடற்கரையில் பேனா சின்னம் வையுங்கள். அதை மீறி கடலுக்குள் பேனா சின்னம் வைத்தால் அதை உடைப்பேன் என்று தெரிவித்தார். இந்த கருத்துக்கு திமுகவினர் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ள திமுக எம்பி அப்துல்லா, தலைவர் கலைஞரின் நினைவாக பேனா சிலை வைத்தால் உடைப்பேன் என்றாரே சீமான் ? ”மன்னிக்கனும்… திமுகவுக்கு பிஸ்கட் போடும் பழக்கம் இல்லை.. எனவே அவர் கருதுவதை எங்களால் தடுக்க முடியாது என சீமானை விமர்சித்துள்ளார்.
கூலிக்கு மாரடிக்கும் நாய்க்கு சரியான பதிலடி….#கடலில்பேனா_அமைப்போம் | #கடலில்பேனா_வேண்டும் | #கலைஞர்பேணா pic.twitter.com/djYS1XELF1
— Trends DMK ☀ (@TrendsDmk) January 31, 2023