அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் வீசி வரும் பனிப்புயலால் அம்மாகாணம் நிலைகுலைந்துள்ளது. அதோடு அங்கு வீசி வரும் பனிபுயலால் 3.5 கோடிக்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பலத்த காற்றினால் மரங்கள் வேரோடு சாயுவதும், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டும் உள்ளது. இதனால் 1.2 லட்சம் வீடுகளில் மின் இணைப்பு இன்றி மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து அந்நாட்டின் செய்தி தொடர்பாளரான கரீனா காராள் என்பவர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது “வெள்ளத்தினால் மரங்கள் சாய்வது போன்ற தடைகளால் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.இதனையடுத்து சான்பிரான்சிஸ்கோ நகரில் மரம் விழுந்த ஐந்து பேர் பலியாகி உள்ளனர்.
மேலும் அங்கு அமைந்துள்ள சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்குவதில் நான்கு மணி நேரம் காலதாமதம் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் சாண்டா பார்படா கவுண்டிங் பகுதியில் 26 வீடுகள் சேதமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களாக பெய்த கன மழையில் ஏற்பட்ட ஏற்பட்டு அமெரிக்காவின் முக்கிய நகரங்கள் நிலைகுலைந்துள்ளது. கடந்த அக்டோபரில் இருந்து வழக்கமாக பெய்யும் மழையை விட கிட்டத்தட்ட 200 சதவீதம் கூடுதல் மழை பெய்ததாக கூறப்படுகின்றது. மேலும் அடுத்த இரண்டு வாரத்திற்கு தேவையான குடிநீர், உணவு, மருந்து மற்றும் எரிபொருட்கள் ஆகியவற்றை பொதுமக்கள் சேகரித்து வைத்துக் கொள்ளும்படி அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனால் அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுப்பணித்துறை ஊழியர்கள் தயார் நிலையில் இருப்பார்கள் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.