“நேருவின் நினைவு தினம்” சோனியா , ராகுல் அஞ்சலி செலுத்தினர்….!!

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நினைவு நாளையொட்டி சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மரியாதை செலுத்தினர்.

இந்தியா விடுதலை அடைந்ததும் நாட்டின் முதல் பிரதமராக பொறுப்பு வகித்த  ஜவஹர்லால் நேரு  1964_ஆம் ஆண்டு மே  மாதம் 27_ஆம் தேதி காலமானார். நேரு காலமான நாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டு வருவது வழக்கம். அந்த வகையில் இன்று  நேருவின் 55-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.

நேருவின் நினைவு தினத்தையொட்டி சாந்திவன் பகுதியில் இருக்கும் அவரின்  நினைவிடத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி , இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஹமீது அன்சாரி உள்ளிட்டோர் நேரடியாக சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி மரியாதையை செய்தனர்.