“தாயை கொன்ற மகன் “செல்போனால் நிகழ்ந்த விபரீதம் ..!!

இரவில் அதிகமாக செல்போன் பேசிய தாயை மகன் சரமாரியாக தாக்கி கொன்ற  சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

நாகை மாவட்டத்தை சேர்ந்தவர் வெண்ணிலா. இவருக்கு பரத் என்ற 20 வயது மகன் ஒருவர் உள்ளார். வெண்ணிலா இரவு நேரங்களில் அதிகமாக மர்ம நபர் ஒருவரிடம் செல்போன் பேசி வந்துள்ளார். இதனை சற்றும் விரும்பாத மகன் பரத் தாய் வெண்ணிலாவை கண்டித்துள்ளார்.

ஆனால் அதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து இரவு நேரங்களில் அதிகமாக செல்போன் பேசிவந்திருக்கிறார் வெண்ணிலா. இதனால் ஆத்திரம் அடைந்த பரத் வெண்ணிலாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த வெண்ணிலா தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த வெண்ணிலா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி மகன் வரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *