“திருமணத்திற்காக சொந்த தந்தையை கொன்ற மகன் “பொள்ளாச்சியில் பரபரப்பு!!..

பொள்ளாச்சி பகுதியில் திருமணத்திற்காக சொந்த தந்தையை மகன் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

பொள்ளாச்சி அருகே உள்ள தென்சங்கம் பாளையத்த்தில் ஜோதிமணி என்பவர் தனது மனைவி ஈஸ்வரி மற்றும் இரண்டு மகன்கள் ஸ்ரீதர் மற்றும் ராஜலிங்கம் ஆகியோருடன் வசித்து வந்தார்.மூத்த மகன் ஸ்ரீதர் திருமணம் முடிந்து பின்  மனைவியை விவாகரத்து செய்துவிட்டு கோயம்புத்தூரில் தனியாக தங்கி தச்சு வேலை செய்து வந்தார்.

கடந்த 18ம் தேதியன்று வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்த ஸ்ரீதர் வாக்களித்து விட்டு ஓரிரு நாட்கள் தங்கி விட்டு செல்லலாம் என்று நினைத்திருந்தார். இந்நிலையில் ஸ்ரீதர் மறுதிருமணம் செய்து கொள்ளாததால் தனது திருமணம் தடைப்படுவதாக எண்ணி மனம் வருந்தி மது அருந்திவிட்டு ஸ்ரீதருடன் ராஜலிங்கம் தகராறில் ஈடுபட்டார். தகராறு முற்றிய நிலையில் ஸ்ரீதரை அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து சரமாரியாக தாக்க தொடங்கினார் ராஜலிங்கம்.

இதனை கண்ட ஜோதிமணி மற்றும் ஈஸ்வரி ஆகியோர் மகன்களை தடுப்பதற்காக ஓடிவந்தனர்.  இதனையடுத்து தடுக்க வந்த தாய் தந்தையும் சேர்த்து ராஜலிங்கம் இரும்பு கம்பியால் தாக்கினர் இந்த தகராறில் மூவரும் பலத்த காயத்துடன் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் ஸ்ரீதர் மற்றும் ஈஸ்வரி ஆகியோர் பலத்த காயங்களுடன் தப்பிய நிலையில் ஜோதிமணி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின் இந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனை அறிந்த ராஜலிங்கம் தலைமறைவானார் தற்போது தலைமறைவான ராஜாலிங்கத்தை பொள்ளாச்சி காவல்துறையினர் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர்.