“சூரிய மின்சக்தி”மாதம் ரூ10,00,000 வரை சேமிப்பு…. மதுரை விமான நிலைய இயக்குனர் தகவல்..!!

சூரிய மின்சக்தி மூலம் மாதத்திற்கு ரூ10 லட்சம் வரை மின் கட்டணம் சேமிக்கப்படுவதாக  மதுரை விமான நிலைய இயக்குனர் தீபி ராவ் தெரிவித்துள்ளார்.

பசுமை நடவடிக்கையாக தேசிய விமான போக்குவரத்து ஆணையம் அனைத்து விமான நிலையங்களிலும் சோலார் பேனல்கள் அமைத்து மின் உற்பத்தி செய்ய அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் மதுரை விமான நிலையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் சூரிய மின்சக்தி மூலம் 170 கிலோ வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.

Image result for solar system in airport

இந்நிலையில் மேலும் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் விதமாக 4.8 கோடி ரூபாய் மதிப்பில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டு சூரிய மின்சக்தி  மூலம் 730 கிலோ வாட் மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மதுரை விமான நிலைய இயக்குனர் தீபி ராவ் கூறியதாவது,  சூரிய மின்சக்திகள் மூலம் 30% மின் தேவைகள் பூர்த்தி செய்யப்படுவதால் மாதம் 10 லட்சம் ரூபாய் வரை மின் கட்டணம் சேமிக்கப்படுகிறது.மேலும்  இந்த  சோலார் பேனல்களை 23 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம் என்றும், இதில் செலுத்திய முதலீடுகளை நான்கு ஆண்டுகளில் மின் உற்பத்தி மூலம் திரும்பப் பெற்றுவிடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.