தமிழகம் கேரளா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் சூரியகிரகணம் வட்ட வடிவில் தீச்சுடர் போல் காணப்படும் என நேரு கோளரங்க இயக்குனர் ரத்ன ஸ்ரீ தெரிவித்துள்ளார்.
ஆண்டுக்கு ஒருமுறை தோன்றும் சூரிய கிரகணம் இந்த ஆண்டு வரும் டிசம்பர் 26 ஆம் தேதி தோன்றும் எனக் கூறப்படுகிறது. இதனை பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் எளிய முறையில் பார்ப்பது தொடர்பாக நேரு கோளரங்கம் மற்றும் நேரு ஆராய்ச்சி அரங்கம் அறிவியல் அருங்காட்சியகம் இணைந்து தமிழகத்தின் பல்வேறு பள்ளிகளில் இம்மாதம் பயிற்சிப் பட்டறை நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பொள்ளாச்சி நாச்சியார் வித்யாலயம் பகுதியில் நடந்த பயிற்சி பட்டறையில் மாணவர்கள் ஆர்வமுடன் வட்ட வடிவ சூரியனை வெள்ளை வெள்ளைநிற தாளில் அளவிட்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். குறைந்த செலவில் ஒளிவிலகல் தொலைநோக்கு கருவி செய்து சூரிய கிரகணத்தை பார்ப்பது குறித்தும் செய்து காண்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பேசிய இயக்குனர் ரத்தின ஸ்ரீ நடப்பாண்டு தமிழகம் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் சூரிய கிரகணம் முழுமையாக தெரியும் என்றும் பொள்ளாச்சியில் இந்த கிரகணம் தெளிவாக தெரியும் என்றும் கூறினார்.