போயிங் விமான நிறுவனம், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு போயிங் 737 மேக்ஸ் விமானங்களில் சாப்ட்வேரை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
சமீபத்தில் எத்தியோப்பியாவில் போயிங் 737 மேக்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் எந்த வித காரணமுமின்றி விபத்துக்குள்ளானதில் 157 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவத்தையடுத்து, போயிங் 737 மேக்ஸ் விமானத்தின் கோர விபத்து குறித்த அச்சத்தால் இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் போயிங் விமானங்கள் பறக்க தடை விதித்துள்ளன.

இந்நிலையில் சிகாகோவில் போயிங் நிறுவன அதிகாரிகள் விமான விபத்து குறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில் விமானப் பயணிகளின் பயத்தை போக்கும் வரையில் விமானத்தில் உள்ள தொழில் நுட்பப் பிரச்சினைகளை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் சாப்ட்வேரை மேம்படுத்த உள்ளதாக தெரிவித்தனர். ஏற்கனவே உள்ள பழைய விமானங்களை விமானி அறையான காக்பிட்டை எச்சரிக்கை விளக்குகளுடன் மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.