இமயமலையில் காணப்பட்டது பனிமனிதனின் காலடித்தடமா…..????

இந்திய ராணுவத்தினர் இமயமலையில் பனிமனிதனின் காலடித்தடங்களை கண்டதாக  தகவல் வெளியாகியுள்ளது . 

இமயமலை பனிபிரதேசங்களில் பனிமனிதன் வாழ்வதாக நம்பப்படுகிறது. நேபாளத்தில் வசிக்கும் மக்கள் பனி மனிதனை கடவுளாகவே வழிபடுகின்றனர். இந்நிலையில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த மலையேற்ற வீரர்கள் இமய மலையில் ஏறும் போது மர்மமான மிகப்பெரிய காலடித் தடங்களைப் பார்த்துள்ளனர்.

Image result for பனிமனிதனின் காலடித்தடங்களை

இக்காலடி தடங்களை ஆராய்ந்த இந்திய ராணுவத்தினர், அவை எட்டியின் காலடித் தடங்கள் என்று  டுவிட் செய்துள்ளனர். மேலும் மகாலு முகாம் அருகில் எட்டியின் கால்தடம் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேபாள அதிகாரிகள், ராணுவத்தின் இந்த கூற்றை மறுத்தனர். இது குறித்து நேபாள செய்தி தொடர்பாளர் பிக்யான் தேவ் பாண்டே கூறுகையில், உண்மையை கண்டறிய முயற்சி செய்தோம், ஆனால் உள்ளூரில் வசிப்பவர்கள் இது காட்டு கரடியின் கால்தடம் என்றும், இங்கு இந்த மாதிரியான காலடி தடங்கள் அடிக்கடி காணப்படும் என்றும் தெரிவித்தனர்.