புகைப்பிடிக்கும் நண்டு… வைரலாகும் வீடியோ..!!

நண்டு ஒன்று ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

புகை உயிருக்கு பகை, உடலுக்கு கேடு தரும் என்பது நம்மில் அனைவருக்கும் தெரியும். எந்த தருணத்திலும் புகை பிடிப்பது என்பது தவறான பழக்கம். இதை அரசும் பல சந்தர்ப்பங்களில் மக்களிடம் தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் மனிதர்களைத் தாண்டி இப்போது ஒரு நண்டு ஸ்டைலாக சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் உலா வர ஆரம்பித்துள்ளன.

ஐஎப்எஸ் அதிகாரியான சுஷாந்தா நந்தா என்பவர் வனவிலங்குகள், பறவை இனங்கள் பற்றிய வீடியோகளைப் பதிவேற்றுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்கள். அவர் டுவிட்டரில் பதிவேற்றும் வீடியோக்கள் மிகவும் பிரபலம். அதை ரசிப்பதற்கு என்று ஏராளமானோர் உள்ளனர். அப்படி அவர் பதிவேற்றிய நண்டு சிகரெட் பிடிக்கும் வீடியோ ஒன்று இப்போது வைரல் ஆகியுள்ளது. வீடியோவில் காணப்படும் நண்டு சிகரெட்டை மிக ஸ்டைலாக புகைப்பதும், அதன் பின்னணியில் தமிழ் உரையாடல்கள் இருப்பதும் தெரிகிறது. சில வினாடிகள் வீடியோவை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *