“வேடிக்கை பார்க்க சென்ற சிறுமி” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. செங்கல்பட்டில் நடந்த சோகம்….!!!

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மாணவியை தேடும் பணி நடைபெற்று வருகின்றது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிங்கப்பெருமாள் கோவில் சாஸ்திரம்பாக்கம் கிராமத்தில் கோவிந்தசாமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 8-ம் வகுப்பு படித்து வந்த யூட்டிகா என்ற மகள் இருந்துள்ளார். இந்நிலையில் யூட்டிகா தனது நண்பர்கள் 3 பேருடன் சேர்ந்து மழை வெள்ளத்தை வேடிக்கை பார்க்க சென்றுள்ளார். அப்போது ரெட்டிபாளையம் மதகில் இருந்து வெளியேறிய வெள்ளம் விவசாய நிலங்களில் 4 அடி உயரத்தில் கரைபுரண்டு ஓடியது.

அதனை 3 பேரும் ஆர்ப்பரித்து வெள்ளத்தை வேடிக்கை பார்த்து விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் யூட்டிகா எதிர்பாராத விதமாக வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனால் அலறிய மற்ற 2 பேரும் வீட்டிற்கு வந்து யூட்டிகாவின் பெற்றோரிடம் தகவல் தெரிவித்தனர். மேலும் இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட சிறுமியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *