விளக்கு ஏற்றிய சிறுமி…. எதிர்பாராமல் நடந்த சம்பவம்…. கதறும் குடும்பத்தினர்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள கண்டோன்மென்ட் எஸ்.பி.ஓ காலனியில் சிவராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபிநயா என்ற மகள் இருந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று அபிநயா தனது வீட்டில் விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது ஆடையில் தீப்பிடித்து உடல் முழுவதும் வேகமாக பரவியது.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் தீக்காயங்களுடன் சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அபிநயா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் உறவினர்களுடைய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.