பணிக்கு சென்ற பெற்றோர்…. வீட்டில் காத்திருந்த அதிர்ச்சி…. ஈரோட்டில் பரபரப்பு….!!!

வீட்டின் முன்பு விளையாடி கொண்டிருந்த வடமாநில சிறுவன் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மன்சூரி – சாங்கோ பிபி தம்பதியினர் திருப்பூரில் வசித்து வருகின்றனர். இதில் கட்டிட தொழிலாளர்கள் ஆன இவர்களுக்கு 3 பெண், 2 ஆண் என மொத்தம் 5 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் 2 குழந்தைகளை சொந்த ஊரில் விட்டு விட்டு 3 குழந்தைகளுடன் திருப்பூரில் தங்கி வேலைக்கு பார்த்து வருகின்றனர்.  இந்நிலையில் அவர்களது குழந்தைகளான தமன்னா, சபீனா, கர்மான் ஆகிய 3 பேரும் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தனர்.

மேலும் கணவன் – மனைவி இருவரும் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்க்கும்போது கர்மனை மட்டும் காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுவனின் பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே மன்சூர் அருகிலுள்ள வேலம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிப் பதிவுகளையும் தீவிரமாக ஆய்வு செய்து தனிப்படை அமைத்து சிறுவனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *