இடி, மின்னலுடன் கூடிய கனமழை…. சிறுவனுக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தாயனூர் கிராமத்தில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷால்(14) என்ற மகன் இருக்கிறார். இந்த சிறுவன் மேல்மலையனூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளி முடிந்து விஷால் தாயனூர் முருகர் கோவில் அருகே நடந்து சென்ற போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்னல் தாக்கி விஷால் மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு விஷாலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Leave a Reply