நண்பர்களுடன் உற்சாக குளியல்…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. புதுவையில் நடந்த சோகம்….!!!

குளத்தில் மூழ்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடியில் அபுபக்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியிலுள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களுடன் அப்பகுதியிலுள்ள குளத்தில் குளிப்பதற்கு சென்றுள்ளார். அப்போது நீச்சல் தெரியாத காரணத்தினால் அபுபக்கர் தண்ணீரில் மூழ்க தொடங்கியுள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் கூச்சலிட்டனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து குளத்தில் மூழ்கிய அபு பக்கரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *