விளையாடி கொண்டிருந்த சிறுவன்…. திடீரென நடந்த விபரீதம்…. போலீஸ் விசாரணை…!!

வாய்க்காலில் தவறி விழுந்த சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள சாம்பவர் வடகரை பகுதியில் வெல்டிங் பட்டறை தொழிலாளியான ரமேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஷ் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் வாய்க்கால் கரையில் பரமேஷ் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராதவிதமாக பரமேஷ் வாய்க்காலில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி விட்டான்.

இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனின் சடலத்தை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் சிறுவனின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *