“நண்பர்களுடன் உற்சாக குளியல்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி….. வேலூரில் நடந்த சோகம்….!!!

கிணற்றில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்திலுள்ள சாஸ்திரி நகரில் ராமன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு 2 மகன்கள் இருந்துள்ளனர். இதில் 2-வது மகன் பரத் தனது நண்பர்களுடன் அருகில் உள்ள கிணற்றில் குளிக்க சென்றுள்ளார். அப்போது திடீரென தண்ணீரில் மூழ்க தொடங்கினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் அக்கம் பக்கத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி அக்கம் பக்கத்தினர் கிணற்றுக்குள் இறங்கி சிறுவனைத் தேடி பார்த்துள்ளனர். இருப்பினும் அவர் கிடைக்கவில்லை. எனவே வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேர தேடலுக்குப் பிறகு சிறுவனை பிணமாக மீட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சிறுவனின் உடலை கைப்பற்றி உடலற்கூறு பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *