“தூங்கிக் கொண்டிருந்த சிறுவர்கள்” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. கரூரில் நடந்த சோகம்….!!!

சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டத்தில் உள்ள வெங்கடாபுரம் பகுதியில் காவலாளியாக பணியாற்றி வரும் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு மலர்கொடி என்ற மனைவியும், ஆகாஷ், சுனில் என்ற 2 மகன்களும் இருந்துள்ளனர். இந்நிலையில் அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக இவர்களது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 சிறுவர்களும் அடியில் சிக்கிக் கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சிறுவர்களின் பெற்றோர் அவர்களை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கிய 2 பேரை மீட்டனர். அதில் சுனில் உயிரிழந்து விட்ட நிலையில் படுகாயம் அடைந்த ஆகாஷை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்து பலியான சுனிலின் உடலை மீட்டு காவல்துறையினர் உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்து சிறுவனின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அப்பகுதிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *