“வேடிக்கை பார்க்கச் சென்ற மகன்” தாய் கண்முன்னே நேர்ந்த சம்பவம்…. வேலூரில் நடந்த சோகம்….!!!

வெள்ளத்தை வேடிக்கை பார்க்கச் சென்ற சிறுவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள கத்தாரி குப்பம் கிராமத்தில் சுதாகர்-பவித்ரா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரித்திக் ரோஷன், யுவன் சி ஆதித்யா என்ற 2 மகன்கள் இருந்துள்ளனர். கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பவித்ரா தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு வெள்ளப்பெருக்கை வேடிக்கை பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது யுவன் சி ஆதித்யாவை இடுப்பில் வைத்துக் கொண்டும், ரித்திக் ரோஷனை கையில் பிடித்த படியும் ஆற்றங்கரையில் நின்று பவித்ரா வெள்ளத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவரின் கையில் இருந்து ரித்திக் ரோஷன் நழுவி ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனையடுத்து குழந்தை தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதை பார்த்து அதிர்ச்சியடைந்து பவித்ரா கூச்சலிட்டு உள்ளார்.

ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையை கண்ணுக்கு தெரியாத தூரத்திற்கு வெள்ளம் இழுத்துச் சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆற்றுப்படுகை முழுவதும் சிறுவனை தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. எனவே தேடும் பணியில் தீவிரமாக நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *