விளையாடி கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பெரும் சோகம்…!!

திருச்சி மாவட்டத்தில் உள்ள உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் குணசேகரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் டீக்கடையில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 1 1/2 வயதுடைய சன்வந்த் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் குழந்தை வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராதவிதமாக 3 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து தத்தளித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யபாரதி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தனது குழந்தையை மீட்டு திருச்சியில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு குழந்தை இழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.