மோடி குறித்து அவதூறு பேச்சு… ராகுல் காந்தி விவகாரத்தில் பாஜக அவசரம்… அன்புமணி ராமதாஸ் பேச்சு…!!!!!!

கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது பிரதமர் மோடியின் பெயர் பற்றி ராகுல் காந்தி அவதூறாக பேசியது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அதில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனை   தொடர்ந்து எம்பி பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு  அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ராகுல் காந்தி பதவி நீக்கம் விவகாரத்தில் பாஜக அவசரப்படாமல் இருந்திருக்கலாம். மேல்முறையீட்டில் அவருக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றால் பதவி நீக்கம் செய்திருக்கலாம் என தெரிவித்துள்ளார்.