“இவர்களும் பறக்கலாம்”…. கண்ணாடியால் அமைக்கப்பட்ட அரங்கு…. மகிழ்ச்சியில் திளைத்த மாற்றுத் திறனாளிகள்….!!

பார்சிலோனா நகரத்தில் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் வித்தியாசமான வகையில் ஸ்கை டைவிங் செய்து மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஸ்பெயின் நாட்டில் பார்சிலோனா நகரம் அமைந்துள்ளது. இந்த நகரத்தில் வானில் பல அடி உயரத்தில் இருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்யும் போது கிடைக்கும் அனுபவத்தை மாற்றுத்திறனாளிகளுக்கும் கொடுப்பதற்காக சிலிண்டர் வடிவில் கண்ணாடி அரங்கு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

இதில் ஏராளமான பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயிற்சியாளர்களுடன் கண்ணாடி சிலிண்டருக்குள்  ஸ்கை டைவிங் செய்து மகிழ்ச்சியில் திளைத்து உள்ளனர். மேலும் இதுகுறித்து பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் கூறும்போது காற்றில் மிதக்கும் போது சுதந்திரமாக உணர்ந்ததாகவும் மகிழ்ச்சியில் திளைத்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *