“தூத்துக்குடி துறைமுகத்திற்கு 6 வழிச்சாலை”…. ரூ. 200 கோடி நிதி ஒதுக்கீடு… அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு…!!!

தூத்துக்குடி துறைமுகத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார்.

மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி தூத்துக்குடி துறைமுகத்திற்கு 6 வழிச்சாலை அமைக்க 200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இது குறித்து அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேசிய நெடுஞ்சாலையின் 138-ல் ஒரு பகுதியாக 5.16 கிலோமீட்டர் நீளத்தில் 6 வழிச்சாலை அமைக்க ரூ. 200.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சாலைகள் மூலம் துறைமுக பகுதி போக்குவரத்து மேம்படும் என்று கூறியுள்ளார்.