சிவகார்த்திகேயனின் “வாழ்”…. ஓடிடியில் ரிலீஸ் ஆவதாக தகவல்….!!!

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்பிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவரின் தயாரிப்பில் வெளியான கனா மற்றும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எனும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மூன்றாவதாக “வாழ்” எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளார். அருவி பட இயக்குனர் அருண் பிரபு இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டே முடிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து யு/ஏ சான்றிதழ் பெற்ற இத்திரைப்படத்தை கடந்த ஆண்டில் திரையரங்கில் வெளியிட திட்டமிட்டிருந்தனர்.

ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகிக் கொண்டே இருந்தது. இந்நிலையில் “வாழ்” திரைப்படம் பிரபல ஓடிடித்தளமான சோனி லிவ் வில் வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *