நீண்ட இடைவேளைக்கு பிறகு மோதும் சிவகார்த்திகேயன் – விஜய் சேதுபதி……. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்……!!!

சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி திரைப்படங்கள் பிப்ரவரி மாதம் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் விஜய் சேதுபதி. ரஜினி – கமல், விஜய் – அஜித் போட்டியை தொடர்ந்து இவர்கள் இருவரின் படங்கள் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும். இதனையடுத்து, சிவகார்த்திகேயன் தற்போது ”டான்” படத்தில் நடித்து வருகிறார்.

மேலும், விஜய் சேதுபதி ”காத்துவாக்குல ரெண்டு காதல் ”படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த இருவரின் திரைப்படங்கள் பிப்ரவரி மாதம் ஒரே நாளில் ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இவர்களின் படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிக அளவில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *