கொரோனாவா யாரும் பயப்படாதீங்க…. தொற்றை விரட்டியடிக்கும் மருத்துவம்…. வீடு திரும்பிய 950 நபர்கள்….!!

வேலூரில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 950 பேர் சித்த வைத்தியம் மூலம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகின்றது. எனவே கொரோனா தொற்று குறைவாக காணப்படும் நபர்களுக்கு சித்த வைத்திய முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதனையடுத்து குடியாத்தம் பகுதியில் இருக்கும் குருராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் 650 பேர் சித்த வைத்தியம் மற்றும் இயற்கை வைத்திய முறையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். அவர்களில் 588 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் மீதமிருக்கும் 62 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனைத்தொடர்ந்து வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் 350 பேர் சித்த வைத்தியம் பெற்று வந்துள்ளனர். இவர்களில் 30 பேர் மூச்சுத்திணறல் போன்ற காரணங்களால் வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் மீதமிருக்கும் 320 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். அதேபோன்று வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 170 பேர் இந்த சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இவர்களில் 50 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து சித்த மருத்துவ முகாமில் கபசுர குடிநீர், ஆடாதோடை மணப்பாகு, பிரம்மானந்த பைரவ மாத்திரை, தாளிசாதி வடகம் போன்றவை கொரோனா பாதித்தவர்களுக்கு ஒரு வாரத்திற்கு தினசரி மூன்று வேளை சாப்பிடுவதற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இவர்களுக்கு தியான பயிற்சி, யோகா, நீராவிக் குளியல் போன்றவை அளிக்கப்படுகின்றது. இதனால் ஏழு நாட்களுக்கு பிறகு அவர்களின் ஆக்ஸிஜன் அளவை பரிசோதித்ததில் சரியான முறையில் இருந்தால் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுகின்றனர். ஆனால் ஆக்சிஜன் அளவு குறைவாக காணப்பட்டால் தொற்று பாதித்தவர்களை வேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். இவ்வாறு அந்த மாவட்டத்தில் சித்த வைத்திய முகாமில் இதுவரையிலும் 950 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனையடுத்து மீதமிருக்கும் 182 பேர் சிகிச்சை பெற்று வருவதாக வேலூர் மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் சுசி கண்ணம்மா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *